Friday, March 16, 2007

311. சீன கைக்கூலிகளின் கொலை வெறியாட்டம்

மாவோவின் சித்தாந்தத்தை கடைபிடிப்பதாகக் கூறும் நக்ஸல்பாரிகள் நேற்று அதிகாலை 2 மணி அளவில், (சட்டிஸ்கர் ரேஞ்ச்) பீஜாப்பூர் போலீஸ் போஸ்ட் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, 54 காவலரை வேட்டையாடி விட்டு, இடத்தையும் எரித்து விட்டு, அங்கிருந்த (AK47, SLR வகை) ஆயுதங்களுடன் தப்பி ஓடி விட்டனர். அதிகாலை நேரம் என்பதால், சில காவலர்கள் உறக்கம் கலைவதற்கு முன்னரே செத்துப் போனார்கள் ! இந்த அழித்தொழித்தலில், கிரேனடுகளும், பெட்ரோல் குண்டுகளும் சரமாரியாக வீசப்பட்டன. 13 காவலர்கள் கடும் காயமடைந்தனர். நக்ஸலைட் யாரும் இறந்ததாகத் தெரியவில்லை.

இதில் கொடுமை என்னவென்றால், காவலரில் 38 பேர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கிராமவாசிகள் ! அவர்கள் சம்பளம் வெறும் 1500 ரூபாய் ! ஏழைகளின் உரிமைக்காக போராடுவதாகக் கூறிக் கொள்ளும் நக்ஸல்பாரி இயக்கம், துளியும் இரக்கமின்றி, அவர்களைக் கொன்று குவித்துள்ளது. இதன் மூலம், இந்த அ·றிணை சென்மங்களின் கொள்கை லட்சணத்தை தெளிவாக புரிந்து கொள்ளலாம் !!!

கிட்டத்தட்ட, 400 நக்ஸலைட் தீவிரவாதிகள், யுத்தத் தயார் நிலையில் (in battle fatigues, தூங்கிக் கொண்டிருந்தவரை கொன்று குவிப்பதை யுத்தம் என்று கூறுவது மகா கேவலமாக இருப்பினும்!) வந்து, இந்த கொடிய அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளனர் ! போலீஸ் போஸ்ட்டில் இருந்த காவலர் மொத்தம் 70 பேர் தான். மேலும், காவலர் சிலரை துடிக்க துடிக்க வெட்டிச் சாய்த்துள்ளனர். சமீப காலமாக, கிராமத்து பழங்குடியினர், நக்ஸல்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதிலிருந்து, இந்த மாவோயிஸ்ட் அரக்கர்கள், பொதுமக்கள், காவலர் என்று இரு தரப்பினரையும், குறி வைத்து, திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தி கொன்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது !

நமது மனித உரிமை, மன்னிக்கவும், நக்ஸல்/அ·ப்சல் உரிமைக் காவலர்கள், இப்போது சிறிது காலம் வசதியாக காணாமல் போய் விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதே ஆகும் ! அவர்களைத் தேடிப் போய் கேட்டால், நக்ஸல்பாரிகள் 'தேசிய இன எழுச்சிக்கும்', ஒடுக்கப்பட்டவரின் 'உரிமைக்கும்' போராடி வருவதாக, அளந்து விடுவார்கள்! எப்படி? யாருக்காக போராடுகிறோமோ, அவர்களையே ஈவு இரக்கமின்றி வெட்டிச் சாய்த்தா ????

இந்த அராஜக வன்முறையை செய்த கும்பலில், ஓரிருவர் பிடிபட்டு, நீதிமன்றம் அவர்களுக்கு மரணதண்டனை விதித்தால், காணாமல் போயிருந்த நமது (ஸ்பெஷல் மனிதர்களின் உரிமைக்கு மட்டுமே குரல் கொடுத்துப் போராடும்!) 'மனிதநேய'க் காவலர்கள் பாய்ந்தோடி வந்து, மனித உரிமைக்காக போராடுவதாக பாவ்லா காட்டி, விளம்பரம் தேடுவார்கள்! என்னத்த சொல்ல, எல்லாம் தலையெழுத்து !!!

தொடர்புடைய பதிவு: நக்ஸல்பாரிகளே (சீன) தேச பக்தர்கள்

எ.அ.பாலா

*** 311 ***

12 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

As usual, my comment will be the first comment for any of my posts !

வஜ்ரா said...

ச்ச்சே...
நீங்க ஒரு வேளை மேற்கு வங்க அரசைச் சொல்லியிருக்கிறீர்களோ என்று ஆவலுடன் ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்களே பாலா !? :D

சந்திப்பு said...

பின்லேடன் போன்ற சர்வதேச பயங்கரவாதத்தில் நம் மக்கள் உயிரிழப்பதை விட, புரட்சி பேசும் நக்சலிச பயங்கரவாதிகளால்தான் மிக அதிகமாக கொல்லப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சர்வா ஜூடும் கேம்பில் சென்று பழங்குடி மக்களையும், குழந்தைகளையும் உறங்கும்போது சுட்டுக் கொன்றனர். தற்போது சட்டி°கரில் 50க்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளனர். இதுபற்றியெல்லாம் காங்கிரசோ, பா.ஜ.க.வோ, மமதாவோ கவலைப்படுவதில்லை. அங்கெல்லாம் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று குரல் எழுப்புவதில்லை. பாராளுமன்றத்தில் ஒரு நீலிக் கண்ணீரைக்கூட இவர்கள் வடிப்பதில்லை. இந்திய மக்கள் என்றென்றைக்கும் நக்சலி சித்தாந்தத்தின் பின்னால் அணித்திரள மாட்டார்கள். தற்போது இவர்கள் 20க்கும் மேற்பட்ட குழுக்களாக செயல்படுகிறார்கள். தோல்வியின் விளிம்பில் இருக்கும் இவர்களின் விரக்தி மனப்பான்மையும், புரட்சி பற்றிய தவறான புரிதல்களும்தான் இவர்களை பயங்கரவாதிகளின் விழுமியத்திற்கு தள்ளியுள்ளது. இத்தகைய செயல்களால் ஒருபோதும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மற்றும் உழைப்பாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெறாது. மிக விரைவில் இவர்களின் நக்சலிச சித்தாந்தத்திற்கு மரணப்பெட்டி அடிக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.

said...

ஸ்டானினை பின்பற்றுபவர்கள் இந்த அசுரர்கள் , அவன் தன் நாட்டை முன்னேற்றுவதற்காக தன் மக்களை எதிரிகள் என்று ஜனத்தொகையில் பாதியை கொன்றான் .

அந்த சித்தாந்த தொடர்ச்சியே யாருக்காக போராடுகிறதாக சொல்கிறோமோ அவர்களையே கொலவது .

பின்லேடனே பரவாயில்லை , இந்த மரமண்டைகளுக்கு ,

இங்கே அசுரன் என்று ஒரு கொள்ளைகும்பல் தொண்டர் முண்டா தட்டி வருவார் ,வா என் தளத்துக்கு நாம் சண்டை போடுவோம் என்று

enRenRum-anbudan.BALA said...

Vajra,

Sorry for disappointing you !

சந்திப்பு,

தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ! நக்ஸல் இயக்கத்திற்கு அழிவு காலம் ஆரம்பமாகி விட்டது !

கரு.மூர்த்தி,

வருகைக்கும், உணர்வுக்கும் நன்றி !

said...

நல்லதொரு அவதானிப்பு..இணையத்தில் கம்யூனிஸம் (தான்) சரியான பாதையென்று பேசும் அசுரன்,ராஜவனஜ்,மிதக்கும் வெளி , வரவணை போன்றோர் இந்த மாதிரியான சம்பவங்களை ( உயிர்க்கொலை) கண்டித்து பதிவிட்டால் (நடிக்கவேனும் செய்தால்) அவர்களது மீது நம்பகத்தன்மை கொஞ்சமேனும் ஏற்பட வாய்ப்புள்ளது..இல்லை இதுதான் சரியென்பது அவர்கள் முடிவென்றால் அதையேனும் சொல்லித்தொலைக்கச் சொல்லுங்கள்..அது அடுத்தவருக்கு (அப்பாவிகளுக்கும்...பொது சனங்களுக்கும்) அவர்களைப் போன்றோரது சித்தாந்தங்களைப் பற்றி ஒரு எச்சரிக்கைப் பலகையாகவாவது இருக்கும்...இது ஒரு புறப் இருக்க மேற்கு வங்கத்தில் முதளாளி வர்கத்தின்( அவர்களது சொலவாடைதான்) ஏவல் நாயாக செயல்பட்டு மக்களை சுட்டுக் கொலை செய்து விட்டு , அதற்கு மன்னிப்புக் கேட்க்கும் அரசாங்கம்..எங்களுக்கு மன்னிப்பு கேட்கும் நேர்மையாவது இருக்கிறது..பிஜேபி காரர்களுக்கு அதுகூட இல்லை என சில இணைய கழிசடைகள் இதற்கும் பெருமையாக மார் தட்டிக் கொள்ள முன்வரலாம் ..தூ..என்று துப்பக் கூட பிடிக்கவில்லை எனக்கு.
அதற்கும்கூட தகுதியற்ற அற்பங்கள்

enRenRum-anbudan.BALA said...

அனானி,

இதைப் பார்க்கவில்லையா தாங்கள் ? வருகைக்கு நன்றி.

//நமது மனித உரிமை, மன்னிக்கவும், நக்ஸல்/அ·ப்சல் உரிமைக் காவலர்கள், இப்போது சிறிது காலம் வசதியாக காணாமல் போய் விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதே ஆகும் ! அவர்களைத் தேடிப் போய் கேட்டால், நக்ஸல்பாரிகள் 'தேசிய இன எழுச்சிக்கும்', ஒடுக்கப்பட்டவரின் 'உரிமைக்கும்' போராடி வருவதாக, அளந்து விடுவார்கள்! எப்படி? யாருக்காக போராடுகிறோமோ, அவர்களையே ஈவு இரக்கமின்றி வெட்டிச் சாய்த்தா ????

இந்த அராஜக வன்முறையை செய்த கும்பலில், ஓரிருவர் பிடிபட்டு, நீதிமன்றம் அவர்களுக்கு மரணதண்டனை விதித்தால், காணாமல் போயிருந்த நமது (ஸ்பெஷல் மனிதர்களின் உரிமைக்கு மட்டுமே குரல் கொடுத்துப் போராடும்!) 'மனிதநேய'க் காவலர்கள் பாய்ந்தோடி வந்து, மனித உரிமைக்காக போராடுவதாக பாவ்லா காட்டி, விளம்பரம் தேடுவார்கள்!
//

ஜடாயு said...

// இதன் மூலம், இந்த அ·றிணை சென்மங்களின் கொள்கை லட்சணத்தை தெளிவாக புரிந்து கொள்ளலாம் !!!//

உண்மை பாலா. இத்தகைய கொலைவெறி கொள்கையின் வெறியர்கள் பல்கலைக் கழகங்களிலும், உயர்கல்வி நிலையங்களிலும், அரசு அமைப்பிலும் எல்லாம் கூட இருக்கிறார்கள் என்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமே. பெங்களூரில் பன்னாட்டு நிறுவனங்களில் கூட இத்தகைய ஆசாமிகளை சந்தித்திருக்கிறேன் - நக்சல் ஆதரவாளனுக்கு இங்கே என்ன வேலை என்று நான் கேட்டதும் அவர்கள் தடுமாறுவதையும் பார்த்திருக்க்கிறேன்..!

அரசு இரும்புக் கரம் கொண்டு இந்த வன்முறைக் கும்பல்களை ஒழிக்க வேண்டும். இந்த வன்முறைக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் ஆட்களையும் விடாமல் பிடித்துத் தண்டிக்க வேண்டும்.

enRenRum-anbudan.BALA said...

ஜடாயு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//அரசு இரும்புக் கரம் கொண்டு இந்த வன்முறைக் கும்பல்களை ஒழிக்க வேண்டும். இந்த வன்முறைக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் ஆட்களையும் விடாமல் பிடித்துத் தண்டிக்க வேண்டும்.
//
இது நிச்சயம் செய்யப்பட வேண்டிய ஒன்று !!! அப்பாவிகள் கொல்லப்படுவதை ஒரு போதும் நியாயப்படுத்த இயலாது.

எ.அ.பாலா

said...

Where is Biryani pottalam "Midakkum Veli".....

enRenRum-anbudan.BALA said...

anony,

வருகைக்கு நன்றி !

நாடோடி said...

//Where is Biryani pottalam "Midakkum Veli".....//

என் பதிவுக்கு வந்து ஓடி போனவருதான் இன்னும் காணோம். நானே வருவாரா வராமாட்டாரானு தேடிக்கிட்டு இருக்கேன்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails